மாமியார் வீட்டில் இருந்த மனைவி; பார்க்கச் சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் பலி: திருமணமான 2 மாதத்தில் சோகம்

மாமியார் வீட்டில் இருந்த மனைவி; பார்க்கச் சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் பலி: திருமணமான 2 மாதத்தில் சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை பார்க்கச் சென்ற புது மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன்(36) கட்டிட வேலை செய்துவந்தார். இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியைச் சேர்ந்த மரிய ரேகா என்பவருக்கும் கடந்த இருமாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பணக்குடியில் இருக்கும் தன் தாயின் வீட்டிற்கு மரிய ரேகா சென்று இருந்தார். அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவர கடந்த 3-ம் தேதி, செல்வன் சென்றார். இவர் குமரிமாவட்டம், ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை அருகில் வரும்போது எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் செல்வன் படுகாயம் அடைந்தார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்வன் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப்பதிந்து செல்வன் தானாகவே கீழே விழுந்தாரா? அல்லது அந்த வழியாகச் சென்ற வேறு வாகனம் எதுவும் இடித்துவிட்டு நிற்காமல் சென்றதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in