நண்பனின் எரியும் உடல் மீது குதித்து தற்கொலை செய்த வாலிபர்: பதற வைத்த பகீர் சம்பவம்!

நண்பனின் சிதையில் குதித்து வாலிபர் தற்கொலை
நண்பனின் சிதையில் குதித்து வாலிபர் தற்கொலைநண்பனின் எரியும் உடல் மீது குதித்து தற்கொலை செய்த வாலிபர்: பதற வைத்த பகீர் சம்பவம்!

உத்தரப்பிரதேசத்தில் புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பனின் எரியூட்டப்பட்ட உடலின் மீது குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்(42). புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அசோக் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில, அவர் நேற்று உயிரிழந்ததாக சிர்சாகஞ்ச் வட்ட அதிகாரி பிரவீன் திவாரி தெரிவித்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் யமுனை நதிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அசோக்கின் நெருங்கிய நண்பரான ஆனந்த்(38) என்பவரும் பங்கேற்றார். சடங்குகள் முடிந்த பின்பு அசோக் உடல் எரியூட்டப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அசோக் எரிந்து கொண்டிருந்த சிதையில் ஆனந்த் திடீரென குதித்தார். இதனால், அவரது உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. இதைக்கண்டு இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆனந்தை நெருப்பில் இருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் ஆக்ரா மருத்துவக் கல்லூரிக்கு ஆனந்த் அனுப்பப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆனந்த் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in