
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவருடனான வாய்த்தகராறில், திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தூத்துக்குடி லயன்ஸ் கிளப் 7 வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் விக்டோரி. இவரது மனைவி அனிசியா. பிரசாந்த் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அனிசியாவுக்கும் திருமணம் ஆகி 11 மாதங்களே ஆகிறது. வெளிநாட்டில் இருந்து பிரசாத் கடந்த 31-ஆம் தேதிதான் ஊருக்கு வந்தார். இந்நிலையில், அவருக்கும், அனிசியாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அனிசியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தென்பாகம் போலீஸார் அனிசியா உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமான 11 மாதங்களிலேயே அனிசியா தற்கொலை செய்து இருப்பதால், சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.