கார் மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து: இருவர் பலி

செங்கல்பட்டு படாளத்தில் நடந்த விபத்து
செங்கல்பட்டு படாளத்தில் நடந்த விபத்துகார் மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து: இருவர் பலி

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் படாளம் காவல் நிலையம் அருகே தபால்மேடு என்ற பகுதியில்,  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் , நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார்  திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி சென்னை திண்டிவனம் சாலை மார்க்கத்தில் கார் எதிர் திசையில் சென்றுள்ளது. 

அப்போது சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற டேங்கர் லாரி கார் மீது மோதியது. இதில் காரில் விபத்தில் பயணம் செய்த, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த  மணிரத்தினம் (31), வினோபாரதி (37) என்ற பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான டேங்கர் லாரி
விபத்துக்குள்ளான டேங்கர் லாரிகார் மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து: இருவர் பலி

இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொடூர விபத்து குறித்து படாளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது . விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in