வலுக்கட்டாயமாக மாணவிக்கு முத்தம் கொடுக்கும் மாணவன்; கல்லூரி வளாகத்தில் ராகிங்: வைரலாகும் வீடியோ

வலுக்கட்டாயமாக மாணவிக்கு முத்தம் கொடுக்கும் மாணவன்; கல்லூரி வளாகத்தில் ராகிங்: வைரலாகும் வீடியோ

கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு மத்தியில் மாணவியை மாணவன் முத்தமிட்டு ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் பினாயக் ஆச்சார்யா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு மாணவியைச் சுற்றி நின்று மாணவர்கள் ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ எனக்கூறி மாணவியை வலுக்கட்டாயமாக ஒரு மாணவன் முத்தமிடுகிறார். அவர்களிடமிருந்து அந்த மாணவி தப்பிக்க முயற்சிக்கும் போது பிளாஸ்டிக் பைப் வைத்து சேரில் அமர்ந்திருக்கும் மாணவர், அடிப்பேன் என்று மிரட்டி கீழே தள்ளி விடுகிறார். மாணவியை ராகிங் செய்யும் போது சுற்றி நின்று மாணவ, மாணவிகள் கைதட்டி சிரிக்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மாணவர் அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பெர்காம்பூர் பஜார் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை ராகிங் செய்தவர் ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹத் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ராகிங் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in