`என்ன பாஸ் பண்ணி விடுங்க'- விடைத்தாளில் 500 ரூபாய் லஞ்சம் வைத்த மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி

`என்ன பாஸ் பண்ணி விடுங்க'- விடைத்தாளில் 500 ரூபாய் லஞ்சம் வைத்த மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி

`என்னை பாஸ் பண்ணி விடுங்க, ப்ளீஸ்' என்று மாணவர் ஒருவர் தனது தேர்வு விடைத்தாளில் ஆசிரியருக்கு 500 ரூபாய் லஞ்சமாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் நடந்து முடிந்த பிளஸ்2 பொதுத் தேர்வில் மாணவர் ஒருவர் தன்னுடைய வேதியியல், இயற்பியல் வினாத்தாளில் 500 ரூபாய் வைத்துள்ளார். அதில், என்ன பாஸ் பண்ணி விடுங்க ப்ளீஸ் என்று எழுதிவைத்துள்ளார். இதனைப் பார்த்த ஆசிரியர் ஒருவர், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விசாரணை செய்த பள்ளி நிர்வாகம், தவறு செய்த மாணவன் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதித்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவன், நான் நன்றாக படித்திருந்தேன் என்றும் ஆனால், விடைத்தாளில் பணம் வைத்துக் கொடுத்தால் நிச்சயம் பாஸ் ஆகிவிடுவோம் என்று பலர் கூறியதை நம்பி இப்படி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in