`லாரிகளால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து'- முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்த மாணவன்

`லாரிகளால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து'- முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்த மாணவன்

டிப்பர் லாரிகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவன் ஒருவன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் பேசும் சிறுவன், "காலை 8 மணி முதல் 10 மணி வரை லாரிகள் வருவதால் விபத்துக்கள் ஏற்படும் என்கிற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. இதனால் அந்த லாரிகளை அந்தந்த நேரங்களில் இயக்க வேண்டும்.

மாலை 4 மணியிலிருந்து 5.30 மணி வரை அந்த லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி லாரிகளை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஐயாவுக்கு கோரிக்கை வைக்கிறேன். சின்ன சின்ன பிள்ளைகளை எல்லாம் பார்க்கும்போது எனக்கு அச்சமாக இருக்கிறது என்று கூட பார்த்தேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in