வயல்வெளியில் பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

மின்வேலியில் சிக்கி மாணவர் பலி
மின்வேலியில் சிக்கி மாணவர் பலிவயல்வெளியில் பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள நெல்வாய் கண்டிகையைச் சேர்ந்தவர் ரவி மகன் விக்னேஷ்(19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் அசநெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அவர் சிக்கினார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து விக்னேஷ் உடல், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வயல்வெளி உரிமையாளர் வரதனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in