விடுமுறை நாளில் மட்டும் திருடும் வினோத கொள்ளையன் கைது

விடுமுறை நாளில் மட்டும் திருடும் வினோத கொள்ளையன் கைது

வாரத்தில் 6 நாட்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது போல சீருடை அணிந்து நோட்டமிட்டு, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மட்டும் கொள்ளையில் ஈடுபட்ட வினோத கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து தொடர் கொள்ளை நடைபெற்று வந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த வாலிபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அந்த நபர் தான் கொள்ளையில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. பிடிபட்ட கொள்ளையன், விழுப்புரம் அடுத்த செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன்(32), என்பதும் மனைவியைப் பிரிந்து வாழ்பவர் என்பதும் தெரிய வந்தது. வாரத்தில் ஆறு நாட்கள் விழுப்புரத்தில் தங்கி கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக சீருடை மட்டும் அணிந்து கொண்டு செல்வதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இரவு நேரத்தில் பூந்தமல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது..

மேலும் போலீஸார் கைது செய்யாமல் இருக்க தனியார் நிறுவன ஊழியர் போல சீருடை அணிந்து கொண்டு இரவு நேர பணிக்குச் செல்வது போல நகர் வலம் வந்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொள்ளையில் ஈடுபடுவது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. சிவசந்திரனிடமிருந்து 10 பவுன் நகைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைக்க வைத்திருந்த ஆயுதங்களைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in