எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து: மேடையிலேயே அமெரிக்க இளைஞர் வெறிச்செயல்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து: மேடையிலேயே அமெரிக்க இளைஞர் வெறிச்செயல்

அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மேடையிலேயே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, கடந்த 1980-ம் ஆண்டில் எழுதிய `சாத்தானின் வேதங்கள்' என்ற நூல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. அவருடைய தலைக்கு ஈரான் மதத் தலைவர்கள் பரிசும் அறிவித்தனர். இதனால், அவருடைய உயிருக்கு அச்சறுத்தல் ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவில் குடியேறினார்.

பயங்கரவாதிகளின் மிரட்டலால் வெளிநாடுகளில் பதுங்கி வாழும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்திருந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சல்மான் ருஷ்டியை நோக்கி வந்த மர்மநபர் திடீரென கத்தியால் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தாக்கிய நபரை அங்கிருந்த பாதுகாவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in