அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்து; பல மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட டிராக்டர்: உடல் நசுங்கி 5 பேர் பலி

அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்து; பல மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட டிராக்டர்: உடல் நசுங்கி  5 பேர் பலி

தெலங்கானாவில் அதிவேகத்தில் வந்த லாரி மோதி டிராக்டரில் இருந்த 5 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை அருகே முனகல என்ற இடத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று பூஜையை முடித்துக் கொண்டு 30 பேர் ஒரு டிராக்டரில் சூர்யாபேட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஹைதராபாத்- விஜயவாடா சாலையில் அந்த டிராக்டர் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டரில் இருந்தவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் வேகமாக மோதிய லாரி பல மீட்டர் தூரத்திற்கு டிராக்டரை இழுத்துச் சென்றது.

இதில் டிராக்டரில் இருந்த தென்னேரு பிரமீளா (35), சிந்தகாயலா பிரமீளா (33), உதய் லோகேஷ் (8), நரகோனி கோட்டையா (55), குண்டு ஜோதி (38) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்ளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in