
காரைப்பார்த்து இடைவிடாமல் நாய் குரைத்து கொண்டே இருந்ததால் காரின் பானெட்டுக்குள் ஆராய்ந்தபோது அதற்குள் நாகப்பாம்பு இருந்ததைக் கண்டு காரின் உரிமையாளர் அதிர்ந்து போனார்.
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை வைத்துள்ளார். பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கவி என்ற சுற்றுலா தலத்திற்கு அவர் சமீபத்தில் சென்றிருந்தார். வீட்டிற்கு திரும்பும் வழியில், பாம்பு ஒன்று சாலையைக் கடந்தது. இதனால் அவர் உடனடியாக பிரேக் பிடித்து அவர் காரை நிறுத்தினார்.
இதன் பின் காருக்கு அடியில் பாம்பு இல்லை என்பதை உறுதி செய்தபிறகு, அவர் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கினார். இடையில் சிறிய ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்பதற்காக, கடை ஒன்றின் அருகே அவர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று காரைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது.
இதனால் காருக்குள் புகுந்து விட்டதோ என்று சந்தேகம் அடைந்த காரின் உரிமையாளர், அருகில் இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். அங்கு அதிகாரிகள் காரை சோதனை செய்து பார்த்தனர். காருக்குள் பாம்பு எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். எனவே அங்கிருந்து நேராக அவர் காரை வீட்டிற்கு ஓட்டிச் சென்றார்.
ஆனால் வீட்டிற்கு சென்றதும், அவரது வளர்ப்பு நாய் வித்தியாசமான முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தது. குறிப்பாக காரின் பானெட்டை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. எனவே, பாம்புகளைப் பிடிப்பதில் பிரபலமானவரான வாவா சுரேஷை அவர் தொடர்பு கொண்டார். இதன் பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காரை ஆய்வு செய்தார்.
காரின் பானெட்டை திறந்து பார்த்தபோதும் பாம்பு தென்படவில்லை. அதனால் பாம்பைக் கண்டறிய உரிமையாளரின் நாய் உதவி நாடப்பட்டது. கட்டி வைக்கப்பட்டிருந்த நாய், அவிழ்த்து விடப்பட்டது. உடனடியாக காரை நோக்கி ஓடிய நாய், எஞ்சின் கவருக்கு அடியில் முகர்ந்து பார்க்கத் தொடங்கியது. எனவே பாம்பு அங்குதான் உள்ளது என்பதை வாவா சுரேஷ் அறிந்து கொண்டார்.
இதன்பின் அங்கிருந்து பாம்பு பத்திரமாக பிடித்து அகற்றப்பட்டது. அது நாகப்பாம்பு என்பது தெரியவந்ததும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் இது கொடிய விஷமுள்ள பாம்பு ஆகும். அது காரின் கேபினுக்கு உள்ளே சென்றிருந்தாலோ அல்லது வீட்டிற்குள் நுழைந்திருந்தாலோ பெரும் அசம்பாவிதம நிகழ்ந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!