தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி: 85 பவுன் நகைகள் கொள்ளை

தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி: 85 பவுன் நகைகள் கொள்ளை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு பிரார்த்தனைக்குச் சென்றவர் வீட்டிற்குத் திரும்பிய போது வீட்டில் இருந்த 85 பவுன் நகைகள், லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி(60) எல்.ஐ.சி ஏஜெண்டாக உள்ளார். இவரது மனைவி உஷா பாப்பா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உறவினர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் உஷா பாப்பாவும், உறவினர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு நடக்கும் சிறப்பு பிரார்த்தனைக்காக குருசாமிபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இருந்தனர். கடைசியாக நேசமணி வீட்டை பூட்டிவிட்டு தேவாலயத்தில் பிரார்த்தனைக்காகச் சென்றார்.

பிராத்தனை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய போது நேசமணி வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 85 பவுன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருந்தது. பாவூர் சத்திரம் போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டில் சோதனை செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் இடைவெளியை பயன்படுத்தி வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in