சாலையோரம் கடலை வியாபாரம் செய்த பள்ளி மாணவி: நேசக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!

சாலையோரம் கடலை வியாபாரம் செய்த பள்ளி மாணவி: நேசக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!

கேரள மாநிலம், ஆலப்புழாவில் தன் பள்ளிக்கூடம் அருகிலேயே தன் அம்மாவுக்கு உதவியாக கடலை வியாபாரம் செய்யும் மாணவி குறித்து தெரிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு செய்த உதவி நெகிழ வைத்துள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் கணிச்சகுளங்கரை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 பயின்றுவருகிறார் வினிஷா. இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். வறிய நிலையில் குடும்பம் உள்ளதால் வினிஷாவின் தாய் பார்வதி, தன் மகள் படிக்கும் பள்ளிக்கு அருகிலேயே தினமும் கடலை வியாபாரம் செய்துவருகிறார். பள்ளி முடிந்ததும் சீருடையோடு வினிஷாவும் தன் அம்மாவுக்கு உதவியாக அந்த தள்ளுவண்டிக்கடையில் நிற்பார். கடலை வாங்க வருவோருக்கு அதை பேப்பரில் மடித்துக் கொடுப்பார்.

இந்நிலையில் பள்ளி மாணவி கடலை வியாபாரம் செய்வதும், அவரது குடும்பத்தின் கஷ்ட சூழல் குறித்தும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜார் கவனத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கிருஷ்ண தேஜார், மாணவி வினிஷாவை தன் முகாம் இல்லத்திற்கு அழைத்திருந்தார். தன் தாய் பார்வதியோடு சென்றிருந்தார் வினிஷா. அப்போது ஆட்சியர் அந்த மாணவியின் மொத்த படிப்புச் செலவையும் தானே ஏற்பதாகாச் சொல்லி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். உடனே வினிஷாவின் தாய் பார்வதி ஆட்சியரிடம் தாங்கள் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், அதைக்கட்ட வசதியில்லாமல் தவிப்பதாகவும் சொன்னார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கிருஷ்ண தேஜார் லைப் மிஷன் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு விரைவில் வீடு ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in