பள்ளி விழாவில் நாளை நாடகம்: பகத்சிங் தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

உயிரிழந்த சஞ்சய் கவுடா.
உயிரிழந்த சஞ்சய் கவுடா.

பள்ளி விழாவில் பகத்சிங் வேடமேற்று நடிக்க இருந்த மாணவன் வீட்டில் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்ட போது கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவ நாகராஜ். இவரது மகன் சஞ்சய் கவுடா(12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிக்கும் பள்ளியில் நாளை (நவ.1) கர்நாடகா மாநிலம் உதயமான தினம் (கன்னட ராஜ்யோத் ) விழா நடைபெற இருந்தது.

இதில் பகத் சிங் வேடம் ஏற்று நாடகத்தில் சஞ்சய் கவுடா நடிக்க இருந்தார். இதற்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் கவுடா நேற்று ஒத்திக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பகத் சிங் தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை பார்த்துள்ளார். தனது முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிற்றைக் கட்டி சோபாவில் இருந்து சஞ்சய் கவுடா குதித்துள்ளார். அப்போது அவரது கழுத்தை கயிறு இறுக்கியது. இதனால் அவர் துடித்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் கயிறு இறுக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

கடைக்கு வெளியே சென்றிருந்த பெற்றோர், திரும்பி வந்து பார்த்த போது தங்கள் மகன் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து கதறித் துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து சஞ்சய் கவுடா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in