மாமூல் கேட்டு உணவக ஊழியரைத் தாக்கும் ரவுடி: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கடைக்கு வரும் நபர்களைத் தாக்கும் ரவுடி
கடைக்கு வரும் நபர்களைத் தாக்கும் ரவுடிமாமூல் கேட்டு உணவக ஊழியரைத் தாக்கும் ரவுடி: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உணவகம் மற்றும் வணிக நிறுவனங்களில் கத்தியுடன் அடிக்கடி மாமூல் கேட்டு ரவுடி மிரட்டும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகளை மிரட்டும் ரவுடி அருண்
வியாபாரிகளை மிரட்டும் ரவுடி அருண்மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடி; சமுக வலைதளங்களில் பரவும் சிசிடிவி காட்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உணவகம் மற்றும் வணிக நிறுவனங்களில் கத்தியுடன் அடிக்கடி மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடியால் வியாபாரிகள் அச்சமடைந்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கடா வெங்கடேசன். இவரது மகன் அருண்(28). பிரபல ரவுடியான இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிணையில் வந்த அருண் கையில் கத்தியுடன் வலம் வருவதும் ஸ்ரீபெரும்புதூர் பஜார் வீதி, குன்றத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது குறித்து வியாபாரிகள் புகார் அளித்தால் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் எடுக்க மறுப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் உணவகத்தில் ரவுடி அருண் மாமூல் கேட்டு வருவதும்,கடை ஊழியரைத் தாங்குவது, மாமூல் போதவில்லை என்று பணத்தைத் தூக்கி அடிப்பது உள்ளிட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடி அருண் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in