பொங்கல் அன்று ரவுடிகள் ஸ்கெட்ச்; உறவினர்களை சந்திக்க வந்த வாலிபர் படுகொலை: முன்விரோதத்தால் நடந்த விபரீதம்

கொலை செய்யப்பட்ட ரவுடி நவீன்
கொலை செய்யப்பட்ட ரவுடி நவீன்

சோழவரம் அருகே முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பொங்கல் அன்று உறவினர்களை பார்க்க வந்த போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை அடுத்து சோழவரம் விஜயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவுடி நவீன்(28). சரித்திரபதிவேடு குற்றவாளியான ரவுடி நவீன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. விஜயநல்லூரில் வசித்து வந்த நவீன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூதூர் கிராமத்தில் குடியேறினார். இந்நிலையில் நேற்று மாலை ரவுடி நவீன் விஜயநல்லூரில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று விஜயநல்லூர் சாலையில் வைத்து நவீனை சரமாரி வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த நவீனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவுடி நவீன் உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ரவுடிகள்
கைது செய்யப்பட்ட ரவுடிகள்

உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த சோழவரம் போலீஸார் நவீன் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ரவுடி நவீன் விஜயநல்லூரில் வசித்து வந்தபோது அதே பகுதியை சேரந்த ரவுடி வினோத்(21), சரத்(21), வேலப்பன் ஆகியோருடன் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள், நவீன் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதனையடுத்து நவீன் நேற்று உறவினர்களை சந்திக்க வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வினோத் நேற்று தனது கூட்டாளிகளுடன் சென்று நவீன வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வினோத், சரத், வேலப்பன் ஆகிய 3 பேரை கைது செய்து போலீஸார் தப்பி ஓடிய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

பொங்கல் அன்று உறவினர்களை சந்திக்க வந்த இடத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in