வடை பார்சலில் கிடந்த எலியால் பதறிய வாடிக்கையாளர்; கெஞ்சிய கடை ஓனர்: நடந்தது என்ன?

வடை பார்சலில் கிடந்த எலியால் பதறிய வாடிக்கையாளர்; கெஞ்சிய கடை ஓனர்: நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம்,  சின்னாளபட்டியில் வடை பார்சலில் கருகிய எலி இருந்ததை கண்டு வாடிக்கையாளர் கலக்கமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் பிரபல காபி பார் உள்ளது. இங்கு டீ, கம கமவென மணக்கும் என்பதால் எப்போதுமே கூட்டம் அலைமோதும். பருப்பு, உளுந்தவடை உள்ளிட்ட கார வகை பலகாரங்கள் விற்பனைக்கு தினமும் தயாரிக்கப்படுகிறது. இங்கு சுடச்சுட தயாராகும் சுவை மிகுந்த பலகாரங்களுக்கு தனி வாடிக்கையாளர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் நெடுநாள் வாடிக்கையாளர் ஒருவர் இன்று தனது வீட்டிற்கு வாங்கிச் சென்ற பருப்பு வடை பார்சலை பிரித்தார். அதில் எலி கருகிய நிலையில் இருந்தது. இதை கண்ட  வாடிக்கையாளர் கலக்கமடைந்தார். அந்த பார்சலுடன் காபி பார் சென்று உரிமையாளரிடம் காட்டியபோது, வெளியே சொல்லிடாதீங்க என இறைஞ்சினார். இதை  பெரிதுபடுத்த வேண்டாம் என கெஞ்சாத குறையாக மன்னிப்பு கேட்டார். அந்த வடை பார்சல் வாங்கி சென்ற வாடிக்கையாளர் சமயோஜித புத்தியால் வடை தனி, எலி தனி என பிரித்துவிட்டார்.

அந்த பார்சலை பிரிக்காமல் குழந்தை கையில் கொடுத்திருந்தால் விபரீத விளைவு ஏற்பட்டிருக்கும் அல்லவா? மணக்கும் வடை வாங்கும் வாடிக்கையாளர்களே பார்சல் கேட்டு வாங்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்க!..

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in