இடுப்பில் துப்பாக்கி, பைக்கில் நாட்டு வெடிகுண்டுடன் வந்த ரவுடி: வளைத்துப் பிடித்த போலீஸ்

இடுப்பில் துப்பாக்கி, பைக்கில் நாட்டு வெடிகுண்டுடன் வந்த ரவுடி: வளைத்துப் பிடித்த போலீஸ்

சென்னையில் போலீஸ் வாகனச்சோதனையில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரம் சோதனைச்சாவடி அருகே நேற்று இரவு மதுரவாயல் காவல்நிலைய தலைமைக்காவலர் ராதாகிருஷ்ணன், குணசேகரன், பிரபு உள்ளிட்ட காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரது இடுப்பில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்து நாட்டு வெடிகுண்டு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.. விசாரணையில், அவர் போரூர் பகுதியை சேர்ந்த ரவுடி செல்வம் என்ற ரோஸ் பாக்கியம்(43) என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால் எதிரிகள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பாதுகாப்புக்காக டம்மி துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் சென்றது தெரியவந்தது. அதுமட்டுமன்றி ரவுடி செல்வம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளிடம், துப்பாக்கியைக் காட்டி பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீஸார் ரவுடி செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in