மயிலாடுதுறை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் மயிலாடுதுறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் நாளை காலை 9.30 மணியளவில் யூனியன் கிளப் வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்குகிறது.  மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் ஆகியவை  இணைந்து  இம்முகாமை நடத்துகின்றன.

இதில் மயிலாடுதுறை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள்  கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

எனவே விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறவும். மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு  9499055904 அல்லது 9750975354 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in