குத்தித் தூக்கியெறிந்த ஜல்லிக்கட்டுக்காளை: பார்வை பறிபோன வீரர் உயிரிழப்பு

சிவகுமார்.
சிவகுமார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் கண்பார்வையை இழந்து சிகிச்சை பெற்றுவந்த மாடுபிடி வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில்  நான்காவது சுற்றின்போது சோர்வின் காரணமாக தடுப்புவேலி கம்பி ஓரமாக அமர்ந்திருந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் வடசேரி சிவகுமார் (21) என்ற இளைஞரை வேகமாக ஓடி வந்த ஜல்லிக்கட்டு காளை முட்டி வீசியது.

இதில் அவரது  வலது கண் பார்வை முற்றிலுமாக  பறிபோனது. பலத்த காயமடைந்த சிவகுமார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இன்று அதிகாலை  உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிவகுமாரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தோகைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.  ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in