தீபாவளிக்கு புத்தாடை வாங்கி வந்தவர்கள் மீது மினிலாரி மோதியது: தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பலி

தீபாவளிக்கு  புத்தாடை  வாங்கி வந்தவர்கள் மீது மினிலாரி மோதியது: தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பலி

திருநெல்வேலி அருகே தீபாவளிக்கு புதுத்துணி எடுப்பதற்காக பைக்கில் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள தெற்கு அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மகேந்திரன்(21). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தமிழரசன்(17), கணேசன் மகன் தமிழ்செல்வன் (17) ஆகிய மூவரும் தீபாவளி பண்டிகைக்கு திருநெல்வேலியில் புத்தாடை வாங்கிக் கொண்டு பைக்கில் ஊரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். முன்னீர்பள்ளம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி, பைக்கின் மீது மோதியது.

இதில் புதுத்துணி வாங்கிவிட்டு வீடுத் திரும்பிக் கொண்டிருந்த மூன்று பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மகேந்திரன் உயிர் இழந்தார். தீபாவளிக்கு புத்தாடை எடுத்துவந்த வாலிபர் சாலைவிபத்தில் உயிர் இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in