வாட்ஸ் அப் குழு மூலம் கேரள லாட்டரி விற்பனை: வசமாக சிக்கிய பைனான்சியர்

லாட்டரி சீட்டு
லாட்டரி சீட்டு

திருநெல்வேலியில் வாட்ஸ் அப் குழு அமைத்து அதன்மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பைனாசியரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கேரளத்தில் அம்மாநில அரசே, லாட்டரி சீட்டு நடத்துகிறது. தினசரி அங்கு குலுக்கல் நடக்கிறது. லாட்டரி சீட்டு விற்பனையில் வரும் வருமானம் கேரளத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் லாட்டரி சீட்டை கேரளத்தில் இருந்து வாங்கிவந்து தென்மாவட்டங்களில் விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் போலீஸார் இதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியில் வாட்ஸ் அப் குழு ஒன்று இயங்கி வருவதாகவும், அதில் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸார் அந்த வாட்ஸ் அப் குழுவை கண்காணித்தனர். நாராயணம்மாள்புரத்தைச் சேர்ந்த பைனாச்சியர் பூல்பாண்டி(35) என்பவர்தான் அந்தக் குழுவின் அட்மின் என தெரியவந்தது. இவர் வாட்ஸ் அப் குழு மூலம், கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பூல்பாண்டியை கைதுசெய்த போலீஸார், அவரிடம் இருந்த லாட்டரி விற்றப் பணம் 8 ஆயிரம், கார், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in