ராமேஸ்வரம் வந்தவர் திடீர் மரணம்; 2,850 கிமீ பயணம் செய்து அரியானா பெண் உடல் ஒப்படைப்பு: தமுமுகவின் மனிதநேயம்

ராமேஸ்வரம் வந்தவர் திடீர் மரணம்; 2,850 கிமீ பயணம் செய்து அரியானா பெண் உடல் ஒப்படைப்பு: தமுமுகவின் மனிதநேயம்

ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் மாரடைப்பால் இறந்த அரியானா மூதாட்டி உடலை ராமநாதபுரம் தமுமுக ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்று ஒப்படைத்தது.

அரியானா மாநிலம் மகேந்திர கர்வ் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (70). இவரது மனைவி துர்கா தேவி (65). இவர்களது மகன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 17-ம் அன்று துர்கா தேவி திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்தனர். ராமநாதபுரத்தில் அரியானா வெகு தொலைவு என்பதால், அனைத்து ஆம்புலன்ஸ்களும் உடலை எடுத்து செல்ல மறுத்தனர்.

இந்நிலையில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கான், மாவட்டத் தலைவர் இப்ராஹிம் மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர் தாஜுதீன் ஆகியோரிடம் சிவசங்கர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் துர்காதேவி உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல டிரைவர் சங்கரிடம் அறிவுறுத்தினர். இதனையடுத்து டிசம்பர் 18-ம் தேதி மாலை துர்கா தேவி உடலை ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட்டு டிசம்பர் 20-ம் தேதி இரவு அரியானா சென்றடைந்தது. கடும் குளிர் நிலவும் பனி காலத்தில் 2 ஆயிரத்து 850 கிமீ. தூரத்தை 48 மணி நேரத்தில் பயணம் செய்து துர்கா தேவியின் சொந்த ஊரான மகேந்திர கர்வ் மாவட்டத்திற்கு உடலை அடக்கம் செய்ய உதவினார். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அனைவரையும், தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in