சாதிச் சான்றிதழ் தரவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மைய வாயில் முன்பு ஒருவர் தனது உடலில் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு தீக்குளிப்புக்கான காரணம் குறித்து கேட்டபோது தனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தீக்குளிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.