வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி: அலர்ட்டான கேரள சுகாதாரத்துறை !

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி: அலர்ட்டான கேரள சுகாதாரத்துறை !

வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டதால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. வெளிநாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.

எனவே, வெளிநாட்டில் இருந்து வந்தவரின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ய முடியும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in