கழிப்பறைக்குச் சென்றவர் வரவே இல்லை: இறந்துகிடந்த ஊராட்சி ஊழியர்: குடும்பத்தினர் அதிர்ச்சி

கழிப்பறைக்குச் சென்றவர் வரவே இல்லை: இறந்துகிடந்த ஊராட்சி ஊழியர்: குடும்பத்தினர் அதிர்ச்சி

கழிப்பறையில் தவறி விழுந்து ஊராட்சி மன்ற எழுத்தர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள பொட்டல் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(36) இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் தேவநல்லூர் ஊராட்சியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் உடல்நலக்குறைவால் தவித்து வந்தார். இதனால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று அண்மையில் தான் வீடு திரும்பினார். இதனிடையே இன்று அதிகாலை வீட்டின் கழிப்பறைக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, கழிப்பறையில் மயங்கி விழுந்து இறந்திருந்தார் வேல்முருகன். ஊராட்சி மன்ற எழுத்தர் கழிப்பறையில் விழுந்து இறந்தது தேவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே இச்சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in