`கட்டிடம் இடிக்க அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றவில்லை'- மேயர் பிரியா

சென்னை மேயர் ப்ரியா
சென்னை மேயர் ப்ரியாஅண்ணாசாலை கட்டிட விபத்து எதிரொலி பணிகளை நிறுத்த உத்தரவு

``சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் அண்ணாசாலையில் உள்ள கட்டிடத்தை இடித்தார்கள். ஆனால் வழிகாட்டு நெறிமுறைகளைக் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை'' சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் பிரியா கூறுகையில், ‘’சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3,312 மாநகராட்சி ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளில் ஆரம்ப நிலையில் கொசு புழுக்கள் உருவாகக்கூடிய நிலையில் இருக்கும் பொழுதே கொசு மருந்துகளை தெளித்து அதை ஆரம்ப காலத்தில் அழிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 412 கைத் தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 கைத்தெளிப்பான்கள், 120 விசைத்தெளிப்பான்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் கட்டிடத்தை இடித்தார்கள். ஆனால் வழிகாட்டு நெறிமுறைகளைக் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை. தனியாருக்கு சொந்தமான இடம் அது. நாங்கள் கொடுத்த நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றாமல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் இது குறித்து நேற்றே நோட்டீஸ் வழங்கி உள்ளது. தற்போது அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் அனுமதி பெற்ற பின்பு தான் இது போன்ற கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனுமதி வழங்குவதற்கு முன்னதாக அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு பின்னர்  அனுமதி வழங்கப்படும்‘’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in