சாலை விபத்தில் புதுமணத் தம்பதி பலி

சாலை விபத்தில் புதுமணத் தம்பதி பலி
சாலை விபத்தில் புதுமணத் தம்பதி பலிசாலை விபத்தில் புதுமணத் தம்பதி பலி

சாலை விபத்தில் புதுமணத் தம்பதி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ராகினி(32) இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(33) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகளை தங்கள் ஊரில் கிடா விருந்து திருவிழா நடப்பதால் ராகினியின் பெற்றோர் சாப்பிட அழைத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சாப்பிட்டுவிட்டு இன்று காலையில் தம்பதிகள் பெரம்பலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்கள் ஆங்கரை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது அரியலூர் நோக்கி வந்த பாரம் ஏற்றும் லாரி ஒன்று இவர்கள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகினி, செந்தில்குமார் இருவருமே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லால்குடி போலீஸார் ராகினி, செந்தில்குமார் இருவரது உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த கோவையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரையும் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in