புதுவையிலும் வேகம் காட்டும் H3N2 இன்ஃப்ளுயன்ஸா: சிறார் அதிகளவில் பாதிப்பு!

வைரஸ் -சித்தரிப்புக்கானது
வைரஸ் -சித்தரிப்புக்கானது

புதுச்சேரியில் ஹெச்3என்2 இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. கடந்த 3 மாதங்களில் இந்த வைரஸ் 80க்கும் அதிகமானோரைத் தாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவை மாநில சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் சமீபத்தில் புதுவகை வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இன்புளுயன்ஸா ஏ வைரஸின் துணை வைரஸான எச்3என்2 என்ற இந்த புது வைரஸ் வேகமாகப் பரவுகின்றது. புதுவையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்த வைரஸால் 85 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், மார்ச் மாதத்தில் இன்றைய தேதிவரை இருவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை இன்றைய தேதிவரை எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்டதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த வைரஸ் குழந்தைகளை அதிகம் தாக்குகின்றது. இந்தப் பட்டியலில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 18 பேருக்கும், 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 18 பேரையும் எச்3என்2 வைரஸ் தாக்கியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in