`விண்ணப்பம் வந்துவிட்டது; அடுத்த தனியார் ரயில் பரிசீலனையில் உள்ளது'- தெற்கு ரயில்வேயின் பிளான்

`விண்ணப்பம் வந்துவிட்டது; அடுத்த தனியார் ரயில் பரிசீலனையில் உள்ளது'- தெற்கு ரயில்வேயின் பிளான்

பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மதுரை- காசி இடையிலான திட்டத்திற்கு விண்ணப்பம் வந்துள்ளதாகவும், அது பரிசீலனையில் உள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நவீன பயணிகள் காத்திருப்பு அறை, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுங்கடி சேலை விற்பனை மையம் மற்றும் ரயில் நிலையத்தின் வெளி வளாகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகளையும் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த், இணைப் பொது மேலாளர் செந்தமிழ்ச்செல்வன், கோட்ட பொறியாளர் வில்லியம் ஜாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பி.ஜி.மல்லையா, "தேனி- போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். மேலும், பாம்பன் புதிய ரயில்வே மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.

பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மதுரை- காசி இடையிலான திட்டத்திற்கு விண்ணப்பம் வந்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. காரைக்குடி திருவாரூர் இடையே கேட் கீப்பர் பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஏற்கெனவே கோயம்புத்தூரில் இருந்து சீரடி வரை இயக்கப்பட்ட ரயிலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில், மீண்டும் மதுரையிலிருந்து காசிக்கு அதே பாரதம் கௌரவ் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு ரயில் சேவையை தெற்கு ரயில்வே தொடங்க உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in