துணிக்கடைக்குள் தஞ்சம் புகுந்த கல்லூரி மாணவன்: துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிச்சாய்ந்த கும்பல்

வெட்டப்பட்ட கல்லூரி மாணவன்
வெட்டப்பட்ட கல்லூரி மாணவன்துணிக்கடைக்குள் தஞ்சம் புகுந்த கல்லூரி மாணவன்: துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிச்சாய்ந்த கும்பல்

சென்னை பெரவள்ளூர் பகுதியில் மது அருந்துவது தொடர்பான பிரச்சினை காரணமாக கல்லூரி மாணவனைத் துரத்திய ஒரு கும்பல் ஜவுளிக்கடைக்குள் வைத்து வெட்டிச் சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர்  17 வயது சிறுவன். இவர் கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் பேப்பர் மில்ஸ் சாலையில் இன்று சென்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் துரத்தியது. இதனால் பயந்து போன அந்த மாணவன், அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையின் ஆடை மாற்றும் அறையில் ஒளிந்து கொண்டார். ஆனால், துரத்திர அந்த கும்பல் அந்த மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது. இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற திருவிக நகர் போலீஸார், ஜவுளிக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாக்குதலுக்கு ஆளான மாணவன், அவரது நண்பர் பயாஸ் ஆகியோர் மது அருந்தும் போது, சூர்யா என்பவரை அடித்ததாகவும், இதனால் பழிவாங்க தனது நண்பர்களை அழைத்துச் சென்று சூர்யா தாக்குதலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in