மின்னணு கழிவுகளைக் குப்பையில் கொட்டுவதை தடுக்க பத்மநாபுரம் நகராட்சி அதிரடி திட்டம்

பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர்
பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் மின்னணு கழிவுகளைக் குப்பையில் கொட்டுவதை தடுக்க பத்மநாபுரம் நகராட்சி அதிரடி திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சி நாளை ஒருநாள் முழுவதும் மின்னணு கழிவுகளைப் பிரத்யேகமாக சேகரிக்க உள்ளது. இதன் மூலம் மட்கும், மட்கா குப்பைகளோடு மின்னணு கழிவுகளையும் கொட்டும் செயல் முடிவுக்கு வரும் என்பதால் இந்நகராட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

குமரிமாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சி பாரம்பரிய பெருமைமிக்கது. திருவிதாங்கூர் மன்னர்கள் இதை தலைநகரமாகக் கொண்டே ஆட்சி செய்தனர். அதன் நினைவாக பத்மநாபபுரம் அரண்மனையும் இங்கு உள்ளது. இந்த நகராட்சியானது, நாளை ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதுகுறித்து பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் அருள்சோமன் கூறுகையில், “பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் இருக்கும் மின்னணு கழிவுகளை நாளை (பிப்.25) தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கக்கோரி துண்டுப் பிரசுரம் விநியோகித்து உள்ளோம். இதில் டியூப் லைட், மின்விளக்கு, ப்ரிட்ஜ், கம்ப்யூட்டர், டிவி, வாஷிங் மிஷின், பழைய சிடி, பழைய செல்போன், சார்ஜர், ஹெட்போன், பழைய பேட்டரி, வீடியோ கேசட், யூபிஎஸ், இன்வெர்ட்டர், ஏ.சி, ரேடியோ செட், எலக்ரிக், விளையாட்டுப் பொருள்கள், எலக்ரிக் ஸ்டவ், எலக்ட்ரிக் குக்கர், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட மின்னணு கழிவுகளைப் போடலாம். நாளை பிரத்யேகமாக மின்னணு கழிவுகளை மட்டுமே துப்புரவு பணியாளர்கள் சேகரிப்பார்கள். இதன் மூலம் மக்கும் குட்பை, மட்கா குப்பை பிரித்தெடுப்புக்கும் பணிக்கு இடையூறு இருக்காது. மின்னணு கழிவுகளை மொத்தமாக ஒதுக்கிவிடவும் முடியும் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in