உயிருடன் வந்த தாயார்; அடக்கம் செய்யப்பட்ட பெண் யார்?: அதிர்ச்சியுடன் மகிழ்ந்த மகன்

உயிருடன் வந்த தாயார்; அடக்கம் செய்யப்பட்ட பெண் யார்?: அதிர்ச்சியுடன் மகிழ்ந்த மகன்
உயிருடன் வந்த தாயார்; அடக்கம் செய்யப்பட்ட பெண் யார்?: அதிர்ச்சியுடன் மகிழ்ந்த மகன்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கிடந்த உடலை தனது தாயின் உடல் என நினைத்து மகன் அடக்கம் செய்த நிலையில் அவரது தாய் உயிருடன் வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள். இவருக்கும் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள தனது மகன் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார் சொக்கம்மாள். பின்னர் திடீரென அவர் மாயமானார். மகன்கள் பல இடங்களில் தேடியும் தாயாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 24-ம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் மற்றொரு மகன் சரவணனை அழைத்து சடலத்தை அடையாளம் காண முயன்றனர். அப்போது, அது தனது தாயின் சடலம் என அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து, சொக்கம்மாளின் உடலை இளைய மகன் சரவணன் அடக்கம் செய்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்ததாக கருதப்பட்ட தாயார் சொக்கம்மாள் கடந்த 29-ம் தேதி மகன் சரவணன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன், பின்னர் தாய் உயிருடன் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து ரயில்வே காவல்துறையினரிடம் சரவணன் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அடக்கம் செய்யப்பட்டது செங்குன்றத்தை சேர்ந்த சகுந்தலா தேவி என தெரியவந்தது.

அடக்கம் செய்யப்பட்ட தாயார் உயிரோடு வந்த சம்பவம் கண்டிகை கிராமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in