குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்; மின்னல் வேகத்தில் காப்பாற்றிய போலீஸ்: கணவருடன் நடந்த தகராறால் விபரீதம்

குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்; மின்னல் வேகத்தில் காப்பாற்றிய போலீஸ்: கணவருடன் நடந்த தகராறால் விபரீதம்

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த காவல்துறையினர் மின்னல் வேகத்தில் சென்று 3 பேரையும் மீட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நாச்சியார் பேட்டை கீழத் தெருவை சேர்ந்தவர் சுதா. இவருக்கும், கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமடைந்த சுதா, தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து முடிவு செய்தார். இதையடுத்து, அருகில் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்கு சென்று தனது இரண்டு குழந்தைகளை வீசியதோடு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக ஆற்றில் குறித்து அவர்களை மின்னல் வேகத்தில் மீட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் சுதாவின் கணவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கணவன்- மனைவி இருவருக்கும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். பெற்ற குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in