காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்; மகளைக் கொடூரமாக கொன்ற தாய்: திருநெல்வேலியில் பயங்கரம்

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்; மகளைக் கொடூரமாக கொன்ற தாய்: திருநெல்வேலியில் பயங்கரம்

வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்யாமல், காதலை மகள் கைவிடாத ஆத்திரத்தில் தாயே கொலை செய்த சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாலாமடை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி(45). இந்தத் தம்பதியினருக்கு அருணா(19) என்னும் மகள் இருந்தார். அருணா கோயம்புத்தூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கிப் படித்து வந்தார். அங்கிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் இன்று காலையில் வெகுநேரம் ஆகியும் ஆறுமுகக்கனியின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது ஆறுமுகக்கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். அவரது அருகிலேயே அவரது மகள் அருணா இறந்து கிடந்தார். அருணாவின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் இதுகுறித்து நடத்திய விசாரணையில், “மாணவி அருணா வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அருணா விடாப்பிடியாக அவரையே காதலிப்பதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டில் வேறு வரன் தேட அதையும் அருணா எதிர்த்துள்ளார். இதனால் நேற்று இரவு தாய் ஆறுமுகக்கனிக்கும், அருணாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அருணாவின் கழுத்தை நெரித்தும், கையை அறுத்தும் ஆறுமுகக்கனி கொலை செய்துள்ளார். தொடர்ந்து தானும் வீட்டில் இருந்த ஹேர் டையைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலைப் பிடிக்காமல் மகளை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in