ஹெராயின் போதைக்கு அடிமையான மகன் எனக்கு வேண்டாம்: 15 வயது சிறுவனை போலீஸில் ஒப்படைத்த தாய்

ஹெராயின் போதைக்கு அடிமையான மகன் எனக்கு வேண்டாம்: 15 வயது சிறுவனை போலீஸில் ஒப்படைத்த தாய்

ஹெராயின் போதைக்கு அடிமையான தனது 15 வயது மகனை வேண்டாம் என்று போலீஸாரிடம் தாய் ஒப்படைத்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த தாய், காவல் நிலையத்தில் ஒரு கடிதத்துடன் தனது 15 வயது மகனை ஒப்படைத்தார். அதில், உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும், எனவே அவன் தனக்குத் தேவையில்லை என்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதையடுத்து அந்த 15 வயதான மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அந்த சிறுவனை அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த சிறுவன் சீர்த்திருப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். பெற்ற தாயே மகனை வேண்டாம் என்று போலிஸில் ஒப்படைத்த செயல், இலங்கை முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

இலங்கையில் ஹெராயின் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஹெராயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in