மகனை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த இளம்பெண்: 2 மணி நேரத்திற்குப் பின் சடலமாக மீட்பு

மகனை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த இளம்பெண்:  2 மணி நேரத்திற்குப் பின் சடலமாக மீட்பு

கரோனாவால் கணவனைப் பிரிந்த சோகத்தில் மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை அடுத்த புதன்சந்தை கொண்டமநாயக்கனூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி கீதா. இவர்களது மகன் வில்வின் யாதவ்(3). கடந்த ஆண்டு கரோனாவால் சரவணன் உயிரிழந்தார். இதனால் தனது மகனுடன் வளையபட்டியில் கீதா வசித்து வந்தார். இந்நிலையில் பண்டிகைக்காக நேற்று கொண்டமநாயக்கனூருக்கு கீதா தனது மகனுடன் வநதுள்ளார். கணவர் ஊருக்கு ஓராண்டுப்பின் அவர் வந்துள்ளார். கணவரின் நினைவாக அவர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீதா வெளியே சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடிய போது ஒரு விவசாயக் கிணற்றில் கீதான தனது துப்பட்டாவால் மகனைக் கட்டிக் கொண்டு குதித்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அத்துடன் அவர்களும் கிணற்றில் குதித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரண்டு நேரமாக போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து சேர்ந்த மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேதப பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in