ஒருபக்கம் கடன் தொல்லை; மறுபக்கம் கோபித்துச் சென்ற மனைவி: உயிரை மாய்த்த புது மாப்பிள்ளை!

ஒருபக்கம் கடன் தொல்லை; மறுபக்கம் கோபித்துச் சென்ற மனைவி: உயிரை மாய்த்த புது மாப்பிள்ளை!

டிராக்டர் வாங்கியதில் ஏற்பட்ட கடன், திருமணத்திற்கு வாங்கிய கடன் என அடுத்தடுத்து கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வன்னிகோனந்தலைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முருகராஜ்(29), ஜே.சி.பி ஓட்டுநராக இருக்கும் இவருக்கும், மணிமேகலை என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முருகராஜும், மணிமேகலையும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இந்தத் திருமணத்தை செய்தனர். இந்நிலையில் முருகராஜ் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முருகராஜ் உயிர் இழந்தார்.

தேவர்குளம் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், முருகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இ.எம்.ஐயில் டிராக்டர் ஒன்று வாங்கி உள்ளார். அதுபோக அவரது திருமணத்திற்கும் கடன் வாங்கி உள்ளார். இந்தக் கடன்களைச் சரியாகக் கட்ட முடியாமல் முருகராஜ் தவித்துவந்தார். இதனால் கணவன், மனைவிக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. இதில் மணிமேகலை கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உலைச்சலில் முருகராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மனைவி பிரிந்த துயரம் மற்றும் கடன் பிரச்சினையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in