ஆறுகள் இணைப்பை வலியுறுத்தி ஓடிய கால்கள் -இது நாமக்கல் மாரத்தான்

ஆறுகள் இணைப்பை வலியுறுத்தி ஓடிய கால்கள் -இது நாமக்கல் மாரத்தான்

நீரிழிவு நோய் விழிப்புணர்வு குறித்து சென்னையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறும் வேளையில், நாமக்கல்லில்  நதிகள் இணைப்பை வலியுறுத்தி இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

இந்திய அரசியல் நிர்ணய சாபையில் உறுப்பினராகவும், முதல் பார்லிமென்ட்டில் எம்.பி.யாகவும், தமிழகத்தில் எம்.எல்.ஏ, எம்.எல்.சி, எதிர்க்கட்சித் தலைவர், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நாட்டாண்மைக் கழகத்தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர் திருச்செங்கோடு டி.எம்.காளியண்ணன். இவர் பதவியில் இருந்தபோது காவிரியில் வரும் உபரிநீரை, திருமணி முத்தாறு, சரபங்கா ஆகிய நதிகளுடன் இணைத்து, சேலம், நாமக்கல் மாவட்டவிவசாயிகளுக்கு பேருதவி செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை கொண்டு செயல்பட்டார். 

இதுவரை அந்த திட்டம் நிறைவேறவில்லை. இதை வலியுறுத்தி இன்று காலை 7 மணிக்கு நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபம் அருகில் இருந்து, நாமக்கல் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ்வரன் இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ,  என்று  3 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கொங்கு மண்டபத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டம்  வள்ளிபுரம் வரை சென்று மீண்டும் கொங்கு மண்டபத்தில் நிறைவேற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும், ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in