அக்கா குழந்தையைப் பார்க்க தெலங்கானாவில் இருந்து நெல்லை வந்த வாலிபர்: பைக் விபத்தில் பலி

அக்கா குழந்தையைப் பார்க்க தெலங்கானாவில் இருந்து நெல்லை வந்த வாலிபர்: பைக் விபத்தில் பலி

தெலங்கானா மாநிலத்தில் உணவகத்தில் பணிசெய்துவந்த வாலிபர், தன் அக்காவிற்கு குழந்தை பிறந்திருப்பது தெரிந்து ஊருக்கு வந்தார். புது பைக்கில் குழந்தையைப் பார்க்கச் சென்றவர் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தெற்குப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுல்தான். கூலித் தொழிலாளி. இவரது மகனான ஹமீது கான்(21) படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தெலங்கானா மாநிலத்தில் உறவினர் நடத்தும் உணவகம் ஒன்றில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் இவரது சகோதரிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஹமீது கான் குழந்தையைப் பார்க்க நெல்லைக்கு வந்தார்.

இந்நிலையில் தான் ஹோட்டலில் வேலைசெய்த பணத்தை சிறுக, சிறுக சேர்த்துவைத்து புதுடூவீலரும் வாங்கினார். அந்த பைக்கில் குழந்தையைப் பார்க்கச் சென்றார். அந்த டூவீலரில் அருணாசலபேரி பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது பைக் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறியது. இதில் கீழே விழுந்த ஹமீதுகானுக்குத் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in