சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை : திருமண ஆசை காட்டிய இளைஞர் போக்சோவில் கைது

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை : திருமண ஆசை காட்டிய இளைஞர் போக்சோவில் கைது

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்(19). கூலித் தொழிலாளியான இவர் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மாணவியை வரவழைத்து காட்டுமன்னார்குடிக்கு கடத்திச் சென்று விட்டார். அங்கு அவரை உறவினர் ஒருவர் வீட்டில் வைத்து ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார், காட்டுமன்னார்குடியில் இருந்த சிறுமியை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது, சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in