ஊர் திருவிழாவில் நடந்த கொலை: 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஊர் திருவிழாவில் நடந்த கொலை: 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஊர் திருவிழாவில் ஒருவரை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள்  தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், பகண்டை கூட்டுரோடு  காவல் நிலைய எல்லைக்குட்பட்டது  மரூர் கிராமம். இங்கு  கடந்த 2014-ம் ஆண்டில் மார்ச் மாதம் 18-ம் தேதியன்று  ஊர் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது  ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  கதிர்வேல் மகன் சரவணன்(31) என்பவர்  அதே கிராமத்தைச் சேர்ந்த  ரேணு மகன் பெரியசாமி(43)  என்பவரை  பலமாக தாக்கியதில் பெரியசாமி மரணமடைந்தார்.

இந்த கொலை வழக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது.  நீதிபதி  வெங்கடேசன்  அளித்த  தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி என்று உறுதி செய்து  அவருக்கு  ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும்  324, 326 ஆகிய பிரிவில் தலா இரண்டு வருடம்  என மொத்தம் நான்கு வருட சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பாராட்டுகளை தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in