வண்ண நிறத்தில் புலித்தோலை விற்க முயன்றவர் கைது: சந்தேகத்தில் வனத்துறை

வண்ண நிறத்தில் புலித்தோலை விற்க முயன்றவர் கைது:
வண்ண நிறத்தில் புலித்தோலை விற்க முயன்றவர் கைது:சந்தேகத்தில் வனத்துறை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே புலித்தோலை  விற்க முயற்சித்தவரை  வனத்துறையினர்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அருகே, பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன், (47). இவர் புலித்தோல் வைத்திருப்பதாகவும் அதனை  விற்க முயற்சி செய்வதாகவும் திருச்சி வனக்காவல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.  அதனையடுத்து வனச்சரகர் நவீன் குமார் தலைமையிலான குழுவினர், அர்ஜுனன் வீட்டில் நேற்று  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் புலி தோல் ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அவற்றை  பறிமுதல் செய்த வனக்காவல் குழுவினர், வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  அர்ஜுனனை கைது செய்து விசாரித்ததில், அவர் மீது பல்வேறு வன குற்ற வழக்குகள்  இருப்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ள புலித்தோலில் வண்ணக் கலவை சேர்க்கப்பட்டிருப்பதால், அது  உண்மையான புலித்தோல் தானா? என்பது குறித்தும் வனத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in