வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; முன்னேற்பாடுகள் முக்கியம் மக்களே..

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையங்கள் முன்னரே அறிவித்திருந்தபடி வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தன. அதன்படி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்பகுதி இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின்னர் அது  கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக கர்நாடகா மற்றும், கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in