உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறுமென எச்சரிக்கை

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறுமென எச்சரிக்கை

வங்கக்கடலில் டிசம்பர் 5ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தபடி இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடந்த வாரத்தில் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த இரண்டு மூன்று நாட்களாக அதற்கான சூழல் நிலவி வந்தது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில மாவட்டங்களில் மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இது சிறிது சிறிதாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் மாண்டஸ் புயலாகவும் மாறி, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in