மலை உச்சியில் இருந்து குதித்த 10-ம் வகுப்பு மாணவி, வாலிபர்: உடல் சிதறி பலியான பரிதாபம்

காதல் ஜோடி தற்கொலை
காதல் ஜோடி தற்கொலைமலை உச்சியில் இருந்து குதித்த 10-ம் வகுப்பு மாணவி, வாலிபர்: உடல் சிதறி பலியான பரிதாபம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவி வாலிபருடன் சேர்ந்து மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கண்டிவாலி கிழக்கில் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்குச் செல்லும் வழியில் பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ஜேட்(21). பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர், ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியைக் காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாயிடம், மாணவியைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆகாஷ் ஜேட் கேட்டுள்ளார். பள்ளியில் படிக்கும் சிறுமியை திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவரது தாய் கறாராக கூறியுள்ளார். இதனால் ஆகாஷ் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆகாஷ் ஜேட் அந்த சிறுமியுடன் தலைமறைவானார். இந்த நிலையில் ஆகாஷ் தனது தாய்க்கு செல்போனில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், நாங்கள் இனி திரும்பி வரமாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் பதறிப்போன ஆகாஷின் தாய், சம்தா நகர் போலீஸில் நேற்று புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், காணாமல் போன இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கண்டிவாலி கிழக்கில் உள்ள ஒரு குவாரி பகுதியில் இருந்து ஆகாஷ் ஜேட்டின் செல்போன் கடைசியாக இயங்கியது போலீஸாருக்குத் தெரிய வந்தது. மலைப்பகுதியில் உள்ள அந்த குவாரிக்கு போலீஸார் இன்று சென்றனர். அங்கு கட்டிப்பிடித்தபடி ஆகாஷ் ஜேட்டும், மாணவியும் இறந்து கிடந்தனர். மலை உச்சியில் இருந்து அவர்கள் குதித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவர் உடல்கள் முழுவதும் காயமாக இருந்தது. அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கண்டிவாலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in