கோயிலுக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை!‍‍‍

ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நாய்க்குட்டியை கவ்விச் செல்லும் சிறுத்தை
நாய்க்குட்டியை கவ்விச் செல்லும் சிறுத்தை

கோயிலுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த நாய்க்குட்டியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ரெகுவ அகோபிலம் என்ற கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் 2 குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்தது. இந்நிலையில், நேற்றிரவு சிறுத்தை ஒன்று கோயிலுக்குள் புகுந்தது.

அந்த சிறுத்தை பதுங்கிப் பதுங்கி வந்து, மேடையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஓடிவிட்டது. தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் நாய், சிறுத்தையை விரட்டியும் பிடிக்க முடியவில்லை.

நாய்க்குட்டியை சிறுத்தை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி, தற்போது வெளியே வைரலாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து வனத் துறையினர் சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in