நேற்று புலி, இன்று சிறுத்தை: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற பயங்கரம்!

நேற்று புலி, இன்று சிறுத்தை: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற பயங்கரம்!

ஊட்டியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்த நாயை கவ்விச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் ஓசிஎஸ் காலனி பகுதியில் நேற்று அதிகாலை புலி ஒன்று ஊருக்குள் புகுந்து மாட்டை வேட்டையாடி அதன் அருகிலேயே அமர்ந்திருந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், ஊட்டியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஊட்டியில் விருந்தினர் மாளிகையின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அப்போது, வீட்டில் படுத்து இருந்த நாயே அந்த சிறுத்தை கவ்விச் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு பக்கம் புலி, இன்னொரு பக்கம் சிறுத்தை என்று ஊட்டி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு தகுந்த தீர்வு காண வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in