ஆண் மீது தாக்குதல்... ஆபாச பேச்சு: பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் போதை பெண் அட்டகாசம்

ஆணை வம்பிழுத்த பெண்
ஆணை வம்பிழுத்த பெண்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ஒரு ஆணை, வம்பிழுக்கும் பெண் ஆசாமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வியாபாரத்திற்காகவும், சுற்றுலா செல்வதற்காகவும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அப்பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, கொடைக்கானல், வத்தலகுண்டு ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் நடைமேடை உள்ளது. இதன் அருகே பெண் ஒருவர் குடி போதையில் ஆண் ஒருவரை அடித்து ஆபாசமாக பேசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண் சக பயணிகள் முன்பு அந்த ஆணிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதும், அனைவரையும் மிரட்டும் தொனியில் பேசுவதும் பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in